விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (மே4) வழக்கு விசாரணைக்காக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மற்றும் புகார் அளித்த பெண் எஸ்பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
புதிய குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதியாக புஷ்பராணி இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இருந்த நீதிபதி கோபிநாதன் தேனி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி புஷ்பராணி, விசாரணையை இந்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 11 நாள் பெண் எஸ்பியிடம் முன்னாள் டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vignesh Lockup death : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை!