விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவரது உத்தரவின்பேரில் தனிப்படை காவல் துறையினர் நேற்று (ஆக.18) இரவு விக்கிரவாண்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அழுக்குப் பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நான்கு இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன், பிரவீன், கவிப்பிரியன், கார்த்திக் ஆகிய நான்கு இளைஞர்களைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: ஒடிசாவில் 391 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது!