கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தநிலையில் பாசனத்திற்காக ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறையின் சார்பாக ஏரிகளில் மீன்கள் வளர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்று(பிப்.3) வளவனூர் பகுதியில் உள்ள ஏரிகளில் வளர்ப்பதற்காக மீன்வளத்துறையின் சார்பாக சுமார் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன. அவை முழுவதும் இறந்து போனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் மீன்குஞ்சுகளை கொண்டு வந்த மீன்வளத் துறையின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: அச்சத்தில் பொதுமக்கள்!