விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள புதுகாலனி பகுதியைச் சேர்ந்த செல்வம்-ராஜலட்சுமி தம்பதியின் 3 வயது மகன் நேற்று (ஜூன்) காலி பித்தளை குடத்திற்குள் விளையாடியபோது சிக்கிக்கொண்டான். தலை மற்றும் கைகளை தவிர உடல் முழுவதும் குடத்திற்குள் சிக்கிக்கொண்டது. இதனைக் கண்ட பெற்றோர் எவ்வளவு முயற்சித்தும் சிறுவனை வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் சிறுவனை குடத்துடன் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி குடத்தை அறுத்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உயிருக்குப்போராடிய காகத்தை மீட்ட இளைஞர்கள் - குமரியில் நெகிழ்ச்சி சம்பவம்!