ETV Bharat / state

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தல்: நான்கு பேர் கைது - Four persons arrested for abducting liquor in Villupuram

விழுப்புரம்: கோட்டக்குப்பம், மொராட்டாண்டி சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்திவந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

drinking
drinking
author img

By

Published : Dec 29, 2019, 11:14 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி பகுதியில் கோட்டக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிவந்த TN 07 AE 8687 என்ற பதிவு எண் கொண்ட சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தில் எவ்வித அனுமதியோ, உரிமமோ இன்றி புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 27 பெட்டிகளில் 648 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரனை (38) கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோன்று இன்று மாலை கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை நோக்கிவந்த PY 05 E 1278 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ஆனந்தன், இடையஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா, பாபு ஆகிய மூன்று பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு!

Intro:கோட்டக்குப்பம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் சென்னை நோக்கி வந்த PY 05 E 1278 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அதில் எவ்வித முன் அனுமதியோ, உரிமமோ இன்றி புதுச்சேரி மாநில மதுபாட்டில் வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Conclusion:இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தலில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பெரிய முதலியார் சாவடி பகுதியை சேர்ந்த ஆனந்தன், இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் பாபு ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.