விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவபாரதி கல்வி நிறுவனம் சார்பில் மழைநீர் சேகரிப்பு, ஏடிஸ் கொசு ஒழிப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பெண்கள் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம், குளத்து மேட்டு, காந்திநகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவிகள் ஊர்வலம் வந்தனர்.
டெங்குவை விரட்டுவோம், தண்ணீர் தொட்டியை சுத்தமாக வைத்திருப்போம், கொசு உற்பத்தியை தடுப்போம், கழிவறையை தூய்மையாக வைத்திருப்போம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர். மேலும் இதில் ஆசிரியர்கள் , காவல் துறையினர் , சுகாதாரத் துறையினரும் கலந்துகொண்டனர்.