விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பெயிண்ட் கடைகளில் போலியான ஏசியன் கம்பெனி பெயிண்ட் விற்பனை செய்யப்ப்படுவதாக, அந்தக் கம்பெனிக்கு புகார் சென்றது.
இதனைத் தொடர்ந்து, ஏசியன் பெயிண்ட் கம்பெனி ஊழியர்கள் 8 பேர் கொண்ட குழு, செஞ்சி பகுதி பெயிண்ட் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், கம்பெனி பெயரில் போலியாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களை கைப்பற்றி செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடையில் இருந்த சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள போலி ஏசியன் பெயிண்ட்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த பெயிண்ட் விற்பனை முகவர் குமார் என்பவரை பிடித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு!