இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், "நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் மருத்துவ மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. கந்தசஷ்டி குறித்து அவதூறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு மதநம்பிக்கையும் கொச்சைப்படுத்தக்கூடாது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இதுவரையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. பல்வேறு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்தியாவில் எதுவும் வழங்கவில்லை.
சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன், அதிமுக அவரது தலைமையின் கீழ் செயல்படும் என்பது என்னுடைய கணிப்பு. அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது வழக்குப்பதிவு