விழுப்புரம்: செஞ்சியில் அமைந்துள்ள தனியார் எக்விடாஸ் வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த எக்விடாஸ் வங்கி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி வருகின்றது. இந்நிலையில் நேற்று (டிச.14) ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இன்று திங்கட்கிழமை (டிச.14) வங்கிக்கு வந்த ஊழியர்கள் கதவை திறக்கும் முன்பு வங்கியின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு லாக்கரில் இருந்த 5 லட்சத்து 58 ஆயிரத்து 485 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிட்ருந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், வங்கிக்குள் இருந்த சிசிடிவி கேமராக்கள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் மோப்ப நாய் உடன் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சவுகார்பேட்டை கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை!