விழுப்புரம் அருகே இன்று அதிகாலை சென்னை நோக்கி திருச்சியிலிருந்து வந்துகொண்டிருந்த மினி லாரி சாலை தடுப்பை கடந்து எதிர்புறம் சாலையில் வந்த கேஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேலும், அதே நேரத்தில் கேஸ் டேங்கர் லாரி பின்னால் வந்த மினி லாரியும் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நான்கு வாகனங்களும் மோதிக்கொண்ட விபத்தில் கேஸ் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த விழுப்புரம் காவல் துறையினர், திருச்சி - சென்னை மார்க்க வாகனங்களை ஜானகிபுரம் புறவழிச்சாலை வழியாக திருப்பி அனுப்பினர். மேலும் இவ்விபத்தில் சிக்கிய வாகனங்களை ராட்சத கிரேன்கள் மூலம் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் அப்புறப்படுத்தினர். இதனிடையே விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கேஸ் டேங்கர் லாரி மீது தண்ணீரை அடித்து தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விபத்தில் நான்கு வாகன ஓட்டுநர்களும் பலத்த காயமடைந்தனர். அதில் மினி லாரி ஓட்டுநர்கள் இருவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'டெப்போ ஃபுல்' பேருந்தை கன்டெய்னர் மீது பார்க் செய்த ஓட்டுநர்!