விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரமண்டூரைச் சேர்ந்தவர் சிவமணி. விவசாயியான இவர் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் சிவமணியை, அவரது மனைவி பச்சையம்மாள், உறவினர்கள் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, அவர் தனது மனைவி , உறவினர்களிடம் சொல்லாமலயே திண்டிவனம் முருங்கப்பாக்கத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே, அவரது உறவினரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து, உயிரிழந்துள்ளார்.
பின்பு, அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அவரது உடல் கிணற்றிலிருந்து கயிறுக்கட்டி மேலே கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து ரோஷனை காவல் நிலையத்திலிருந்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஏரியில் முழ்கி அண்ணன்-தம்பி பலி - மணல் குழி உயிரை காவு வாங்கிய பரிதாபம்