விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஏப். 23) மருத்துவ சமுதாய மக்கள், கல்வி, வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கைவிடுத்து ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபட்டனர். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை மருத்துவ சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசால் எந்தவொரு பயனுமில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதனிடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தமிழ்நாட்டில் மருத்துவ சமுதாய மக்கள் தொகை 40 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் 5 % விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கைகளில் நாமமிட்ட மண் சட்டியுடன், நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியதோடு பேரணியாகவும் சென்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!