ETV Bharat / state

மாட்டு கொட்டையில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஆறு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Liquor seized from a cow pen near melmalaiyanur
author img

By

Published : May 20, 2019, 3:40 PM IST

மேல்மலையனூர் அருகே வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திப்பதாக விழுப்புரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செஞ்சி உட்கோட்டம் வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் சுபாவிற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆய்வாளர் சுபாவிற்கு வந்த ரகசிய தகவலின்படி, நேற்றிரவு தனிப்பிரிவு தலைமை காவலர் பாரதி, முதல் நிலை காவலர் மோகன் ஆகியோர் அவலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டபூண்டி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு மாட்டுக் கொட்டகையில் சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள ஐந்து ஆயிரத்து 280 வெளிமாநில (புதுவை) மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள், இதுதொடர்பாக கொடுக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் (33) என்பவரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் செஞ்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாட்டு கொட்டையில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

இதுகுறித்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார், " சனி, ஞாயிறு நாட்களில் காவல் துறையினர் நடத்திய மது வேட்டையில் 85 வழக்குகள் போடப்பட்டு, 45 குற்றவாளிகள கைது செய்துள்ளோம்.

இதுவரை சாராயம் விற்ற கொடுங்குற்றவாளிகள் 9 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 6 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின் பேரில், செஞ்சி உட்கோட்டம் வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் சுபா அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி 19.05.2019 ந் தேதி இரவு வளத்தி தனிப்பிரிவு தலைமை காவலர் பாரதி மற்றும் முதல் நிலை காவலர் மோகன் ஆகியோர் அவலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டபூண்டி அருகே சென்று பார்த்த போது அங்கே ஒரு மாட்டுக்கொட்டகையில் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 5,280  வெளிமாநில (புதுவை) மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றவாளியான மேல்மலையனூர் வட்டம் கொடுக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார்(33) என்பவரை கைது செய்து, மது பாட்டில்களையும் செஞ்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.