ETV Bharat / state

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு; 72 கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 72 பேருக்கு விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு; 72 பேருக்கு ஜாமின்

author img

By

Published : Aug 9, 2022, 5:44 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரியும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப்போராட்டம் மிகத்தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்தி பொருட்களை சூறையாடினர். மேலும் இங்கு போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலால் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயமடைந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி பதிவை வைத்து காவல்துறையினர் மீது கல்வீச்சு நடத்தியது, காவல் துறையினரை செயல்படவிடாமல் தடுத்தது, தனியார் பள்ளிக்கு சேதம் விளைவித்தது, இணையதளங்களில் கலவரங்களை தூண்டும் வகையில் விளம்பரப்படுத்தியது என சுமார் 296 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்களில் 296 பேர் ஜாமீன்கோரி விழுப்புரம் குற்றவியல் அமர்வு முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஜாமீன் கோரியவர்களில் முதற்கட்டமாக கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

மேலும் 50 நபர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக உத்தரவிட்டும், நாளை மீண்டும் 174 நபர்களுக்கான ஜாமீன் மனு மீதான விசாரணையை காலை 11 மணியளவில் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று யார் கொடி ஏற்றுவது - பேச்சுவார்த்தையில் சமரசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.