ETV Bharat / state

திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தில் சாலையை சீரமைத்த ஐடி ஊழியர்

சென்னை தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் சந்திரசேகரன் தனது திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 9.50 லட்சம் பணத்தை வைத்து சொந்த கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்துள்ளார்.

தனது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தில் சாலையை சீரமைத்த ஐடி ஊழியர்

author img

By

Published : Aug 25, 2022, 12:55 PM IST

விழுப்புரம்: வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்திரசேகரன் (31). சென்னையில் தொழில்நுட்ப துறையில் வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 9.50 லட்சம் பணத்தை தன் சொந்த கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் தரமான சிமெண்ட் சாலை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சந்திரசேகரன் கூறியதாவது, "சென்னையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெரு சாலை 20 ஆண்டுகளுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது.

தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இச்சாலையில் நடந்து செல்லவே மிகவும் சிரமமாக உள்ளது. இதனை சீரமைக்க அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சாலையை சீரமைக்க மெத்தனம் காட்டினர்.

'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் இச்சாலையை சீரமைக்கலாம் என நண்பர்கள் சிலர் எனக்கு ஆலோசனையை தர,
வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். 50 சதவீத தொகையை செலுத்துமாறு தெரிவித்தனர். இத்தொகைக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட செலவினங்களுடன் கணக்கிடும்போது மொத்த திட்ட மதிப்பீட்டில், அளிக்க வேண்டிய தொகை 60 சதவீதத்தை எட்டியது.

இந்நிலையில் எனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 9.5 லட்சம் தொகையை, சாலை அமைக்க தரலாம் என முடிவு செய்தேன். என் பெற்றோர்களிடம் இது பற்றி கூறினேன். அவர்களுக்கும் சாலை அமைப்பதில் ஆர்வம் இருந்தாலும், 'உள்ளூர் அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்' என்று கூறி, சற்றே பயந்தனர். அவர்களை தைரியப்படுத்தி சாலை அமைக்க தயாரானேன். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் எனது நண்பர் ஏழுமலையைத் தொடர்பு கொண்டு தகவலை சேகரித்தேன்.

தமிழ்நாடு அரசின், 'நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 100 சதவீத பங்களிப்புடன் இத்திட்டத்தை மேற்கொள்ளலாம்' என்று அவர் தெரிவித்ததுடன் அதற்குரிய நிர்வாக ஒப்புதலைப் பெறவும் உதவினார். 290 மீட்டர் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டு, ஒரே மாதத்தில் நிறைவு பெற்றது. சாலை அமைக்கும் பணியை நாள்தோறும் வானூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.

இச்சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் ரூ.10.50 லட்சம் செலவிட அனுமதி அளித்தது. இந்த அனுமதியை பெற உதவியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் சோமசுந்தரம், செல்வகணபதி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவி இறப்பு வழக்கு... ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு அறிக்கையை வழங்க நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.