'தேச ஒற்றுமை பரப்புரை' எனும் தலைப்பில், அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் குறித்த 'மக்கள் சந்திப்பு கூட்டம்' விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட விதம் குறித்தும், அதனை நீக்கியதற்கான காரணம் குறித்தும் பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும் விளக்கினர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிலர் காஷ்மீர் பிரிவினைவாதிகளை அழைத்துக்கொண்டு வந்து தமிழ்நாட்டில் பேச வைக்கிறார்கள். பிரிவினையை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். திருக்குறள், பாரதியார் கவிதைகளை பெருமைப்படுத்தியது பாஜக அரசுதான். மேலும் சமஸ்கிருதத்தைவிட, தமிழ் மொழி பழமையான மொழி என்று பேசி தமிழ்மொழியை பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளார். இதனை தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டும்.
குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் அடுத்த கட்டத்துக்கு செல்லும். காஷ்மீரில் பிரிவினை பற்றிப் பேசிய ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டார். இனி தமிழ் நாட்டில் பிரிவினை பற்றிப் பேசினால்" என்றார்.
இதையும் படிங்க:குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்; காங்கிரஸ் தலமையில் சாலை மறியல்!