விழுப்புரம்: தமிழ்நாடு அரசு விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதிலிருந்து வேட்பு மனு தாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய கட்சிகள் சுணக்கம் காட்டி வருகின்றன. இருப்பினும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 51 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 615 பேரும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 3,140 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஒன்றிய அலுவலகங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என். ரவி