விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில், ''மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கான கெளரவ விருது மற்றும் ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதினை பெற விருப்பமுள்ளவர்கள் தமிழக அரசின் உதவி பெறாமல், தங்களது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகளாக இருக்க வேண்டும். திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான சேவைகளை செய்திருக்க வேண்டும், குறைந்தது ஐந்து திருநங்கைகள் தங்களுடைய வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கை வாழ உதவிகள் செய்திருக்க வேண்டும்.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது இவ்விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள் https://awards.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், 01/02/2023 முதல் 28/02/2023 மாலை 5 மணிக்குள் விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருதினை பெற தகுதியுள்ளவர்கள்கள் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் முறையாக தேர்வு செய்யப்படுவார்கள்" என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவிடம் உள்ள அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி: கி.வீரமணி விமர்சனம்