விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை திறந்து சரிபார்க்கும் பணி இன்று மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தொடரந்து மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், “நமது மாவட்டத்தில் தற்போது வாக்காளர்களின் வசதிக்கு ஏற்பவும் மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் மாவட்டத்தில் 51 வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துக்களுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 51 வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம் சம்பந்தமாக தகவல் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு