இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்தவர்கள் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04146-1077, 04146-223265, மாவட்டத் தொற்றுநோய் மருத்துவ அலுவலரின் தொலைபேசி எண்: 95002-93057 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் சுயமாகவே தங்களை 28 நாள்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு குடும்ப உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்காமல் இருப்பது, 28 நாள்கள் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:கோவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புறப்பட்ட மருத்துவக்குழு