ETV Bharat / state

சேதமடைந்த தளவானூர் தடுப்பணை; வெடி வைத்து தகர்ப்பு - தளவானூர் தடுப்பணை

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் தடுப்பணை சேதமடைந்ததையடுத்து, வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்ப்பு
தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்ப்பு
author img

By

Published : Nov 15, 2021, 10:21 PM IST

விழுப்புரம்: தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தளவானூர் பகுதியில் தடுப்பணையின் ஒருபகுதி முற்றிலுமாக உடைந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறியது.

இதனால் ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர்கள், அணையை பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி தகர்க்க முயற்சி செய்தனர். நேற்று (நவ.14) சுமார் 100 ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி அணையை வெடிக்கச் செய்தனர்.

தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்ப்பு

ஆனாலும் சேதமடைந்த பகுதி எதிர்பார்த்த அளவுக்கு வெடித்து சிதறாததால், இன்றும் வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில், தடுப்பணை முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: Anna University Semester exam: டிச.13ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.