ETV Bharat / state

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காடு பேச்சாக உள்ளது - அமைச்சர் மஸ்தான் - Minister Mastan

'ஜனநாயக ரீதியாக வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் ஏற்றுகொள்ள வேண்டும். இதனை ஏற்றுகொள்ள முடியாமல் சிறுபிள்ளை அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காடு பேச்சாக இருக்கிறது’ என அமைச்சர் மஸ்தான் கூறினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 3, 2023, 10:19 PM IST

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காடு பேச்சாக உள்ளது - அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம்: திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''முதலமைச்சர் பொது சுகாதாரத்தினை உறுதி செய்திடவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உயர்ரக சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில், திண்டிவனத்தில், ரூ.60.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டட உத்தரவிட்டு, மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்கள் என மொத்தம் 12,475 ச.மீ., பரப்பளவில் அமையவுள்ளது. இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களில் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டடமும், தரைதளத்தில் பிணவறைக்கட்டடமும், எச்.டி அறையும் கட்டப்படவுள்ளது. காத்திருப்பு பகுதி, மருந்தகம், ஸ்கேன் மற்றும் ஸ்கேன், புறநோயாளிகள் வார்டு, மீட்பு அறை, மருத்துவர் அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, உள்ளிட்ட வசதிகள் முதல் தளத்தில் அமையவுள்ளது.

சிகிச்சை அறை, மருத்துவக் கருவியறை, பணி நேர மருத்துவர்கள் அறை, பணி நேர செவிலியர்கள் அறை, தனிமைப்படுத்தப்பட்ட அறை, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் இரண்டாம் தளத்திலும், சிகிச்சை அறை, மருத்துவக்கருவிகள் அறை, பணிநேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறை, மருத்துவ வார்டு, உள்ளிட்ட வசதிகள் மூன்றாம் தளத்தில் உள்ளது.

சிகிச்சை அறை, மருத்துவக் கருவிகள் அறை, பணிநேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறை, மருந்தகம், தனிமைப்படுத்தப்பட்ட அறை, உள்ளிட்டவை நான்காம் தளத்திலும், மீட்பு அறை, நோயாளிகள் கண்காணிப்பு அறை, பணிநேர செவிலியர் அறை உள்ளிட்டவை ஐந்தாம் தளத்தில் அமையவுள்ளது.

கருத்தரங்கு அறை, காத்திருப்பு அறை, எம்.ஆர்.டி அறை, அறுவை சிகிச்சை அறை, தீப்புண் சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட அறை கழிவறை போன்ற பல்வேறு பிரிவுகளுடனும், மின்தூக்கி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுடன் மருத்துவமனை கட்டடம் அமையவுள்ளது'' என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ''திண்டிவனம் பேருந்து நிலையம் 18 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பாஜக தலைவர் அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகிறார். இந்திய நாட்டில் கோபாலபுரத்தில் இருந்து இந்தியா அரசியலை வழிநடத்தியவர், கலைஞர். இவையெல்லாம் அண்ணாமலை போன்ற சிறுபிள்ளைக்கு தெரியாது.

ஆட்சி பொறுப்பேற்றபின் நடந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை பற்றி வாக்காளர் மத்தியில் பேசும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனக் கூறி பிரசாரம் செய்தார். ஜனநாயக ரீதியாக வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிறுபிள்ளை அண்ணாமலை பேச்சு அரைவேக்காடு பேச்சாக இருக்கிறது. கேஸ் விலை பற்றி உரிய காரணம் சொல்லாமல், சாக்கு போக்கு சொல்வது அண்ணாமலை ஸ்பெஷல். பொய்யை பயங்கரமாக சொல்வது தான் அண்ணாமலையின் தனித்தன்மை'' என அமைச்சர் மஸ்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்க வாய்ப்பு… சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.