ETV Bharat / state

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்! - theendamai olippu munnani

விழுப்புரம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம்!
author img

By

Published : Jul 19, 2019, 8:53 AM IST

விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பஞ்சமி நில மீட்பு 3ஆவது மாநாடு விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் நிறுவனர் நிக்கோலஸ் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

இதில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், ஆணவக் கொலையைக் கண்டித்து மாநில முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Intro:விழுப்புரம்: தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவ கொலையை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என, விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Body:விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பஞ்சமி நில மீட்பு 3வது மாநாடு விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் நிறுவனர் நிக்கோலஸ் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Conclusion:இந்த மாநாட்டில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவ கொலையை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

2. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 8ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. ஆணவ கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர்.30ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.