ETV Bharat / state

விழுப்புரம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ 38.94 கோடி வருவாய் இழப்பு - பொதுக்கணக்கு குழுவின் தலைவர் - ஆவின் நிறுவனம்

அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ 38.94 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ஆவின் நிறுவனம்
விழுப்புரம் ஆவின் நிறுவனம்
author img

By

Published : Sep 16, 2022, 11:05 PM IST

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ ஆய்வில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ 38.94 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2018-19ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கருவிகள் , உபகரணங்களை சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாததால் ரூ 26 கோடியே 88 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியம் வராத வகையில் ரூ 11 கோடியே 52 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதுதவிர 1 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய ரூ .1 லட்சம் முதல் ரூ .1 லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும்;ஆனால் இங்கு ரூ 3 லட்சம் கொடுத்து சூரிய மின் கலனை கொள்முதல் செய்துள்ளனர் . அந்த வகையில் அரசுக்கு ரூ 54 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதுபோன்ற இழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் எனவும் தவறில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானுக்கு ரூ.மூவாயிரம் கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.