விழுப்புரம் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் இன்று (செப்.12) அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது தென்பெண்ணையாற்றில் சமூகவிரோதிகள் சிலர் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட பேரங்கியூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, பைத்தாம்பாடி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ராஜ்குமார் ஆகிய மூன்று பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விழுப்புரம் அருகே மணல் திருட்டு: மூவர் கைது
விழுப்புரம்: மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் கைதுசெய்தனர்.