ETV Bharat / state

வீட்டுக்கடனுக்கு 3 மாத இஎம்ஐ கட்டாததால் அடமான சொத்து என சுவரில் எழுதிய தனியார் நிறுவனங்கள்... கடன் பெற்றவர் வேதனை!

3 மாத கடன் நிலுவை தொகை செலுத்தாததால் இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் வீட்டின் மீது பெயின்டால் இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று எழுதிய சம்பவம், கடன்தாரரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடன் பெற்றவர் வீட்டில்  அடமான சொத்து என எழுதிய நிறுவனங்கள்
கடன் பெற்றவர் வீட்டில் அடமான சொத்து என எழுதிய நிறுவனங்கள் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

புதுக்கோட்டை: மூன்று மாத கடன் நிலுவை தொகை செலுத்தாததால் இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனமும் வீடு கட்ட கடன் கொடுத்த நிறுவனமும் வீட்டின் மீது பெயின்டால் இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று எழுதிய சம்பவம், கடன்தாரர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வாத்தனாக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் - மூக்காயி தம்பதியரின் முத்த மகன் சக்திவேல் (45), இளைய மகன் முத்துக்குமார் (38) இருவரும் விவசாய வேலை மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். இதில் சக்திவேல் , ஒரு தனியார் கடன் நிறுவனத்தில் இடத்தை அடமானம் வைத்து ரூபாய் 7.50 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அவரது தம்பி முத்துக்குமார் வேறு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் பத்து லட்சம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை இருவரும் முறையாக செலுத்தி வந்த நிலையில், தாய் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த மூன்று மாத நிலுவைத் தொகை மட்டும் கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. மூன்று மாதம் இஎம்ஐ கட்டப்படாததால் வசூலுக்கு வந்த தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் இந்த இடம் தங்கள் நிறுவனத்தில் அடமானத்தில் உள்ளது என எழுதி வைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாய சகோதரர்கள் இருவரும் செய்வதறியாத திகைத்துள்ளனர். ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய அவர்கள், "இதுபோன்று அத்துமீறும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.