ETV Bharat / state

'குற்றவாளிகளாக மாறிய சிறார்களின் கதை'.. 19 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..! - JUSTICE ANAND VENKATESH

திருட்டு வழக்கில் கைதான 19 வயது இளைஞருக்கு அரசு தரப்பு எதிர்ப்புக்கு மத்தியில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 5:09 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜனா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், "மனுதாரர் செல்போனை திருடி விட்டார் என்பதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு 19 வயதாகும் சூழலில் அவர் மீது கைது செய்யப்பட்ட அன்றே நான்கு வழக்குகள் பொய்யாக பதியப்பட்டுள்ளது. ஆகவே, ஜாமீன் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காரைக்குடியில் பயணிகள் விமான நிலையம் கோரிய வழக்கு; தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவு!

அரசுத் தரப்பில், "மனுதாரர் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலவையில் உள்ளன. சமுதாயத்திற்கு தொந்தரவாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, ஜாமீன் வழங்கக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, " ஒரு இளைஞன் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டாலும், காவல்துறையினர் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்தவுடன் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறான். ஒரு கூட்டத்தின் தலைவனாகிறான். குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை இது. சிறார்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை.

இந்த உத்தரவை தமிழக சிறை துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறை துறையின் துணை காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர் செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு நிபதனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக தினமும் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.