ETV Bharat / state

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் குற்றவாளி சரண்

author img

By

Published : Feb 11, 2020, 12:42 PM IST

விழுப்புரம்: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த நபர் இன்று சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Villupuram petrol bunk manager murder
Villupuram petrol bunk manager murder

விழுப்புரம் - புதுச்சேரி சாலையிலுள்ள கம்பன் நகரில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் கடந்த நான்காம் தேதி பணியிலிருந்த சீனுவாசனை, பெட்ரோல் நிரப்புவதுபோல் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடிக்க காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையில், சீனுவாசன் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கியக் குற்றவாளியான அசார் என்பவர் கடந்த ஆறாம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: குற்றவாளி சரண்

அதைத்தொடர்ந்து, இன்று மற்றொரு குற்றவாளியான அப்பு (எ) கலையரசன் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவரை விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1இல் ஆஜர்படுத்தினர். அவரை நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து காவல் துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

Intro:விழுப்புரம்: பெட்ரோல் நிலைய மேலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Body:விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள கம்பன் நகரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சீனுவாசன் என்பவர் கடந்த 10 வருடங்களாக மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி பணியில் இருந்த சீனுவாசனை, பெட்ரோல் நிரப்புவதுபோல் காரில் வந்த மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க போலீஸ் தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் சீனுவாசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அசார் என்பவர் கடந்த 6ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து இன்று மற்றொரு குற்றவாளியான அப்பு (எ) கலையரசன் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் போலீஸார் அவரை விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தபடுத்தினர்.

Conclusion:பின்னர் அவரை 4நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.