ETV Bharat / state

22 சவரன் நகையைத் திருடிய தீனிப்பண்டார திருடன்!

வேலூர் : வாணியம்பாடியில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த திருடன், குளிர்பானம் அருந்தி, சாக்லேட் சாப்பிட்டு விட்டு, 22 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்து சென்றுள்ளான்.

தீனிபண்டார திருடன்
author img

By

Published : Sep 4, 2019, 11:06 PM IST

Updated : Sep 4, 2019, 11:26 PM IST

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பட்டேல் யாகூப் சாகித் வீதியை சேர்ந்தவர் தவூசிஃப். இவர் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார், நேற்று இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். இவரது மனைவி வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். தவூசிஃப் பணி முடித்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று அங்கிருந்து கணவன் மனைவி இருவரும் இன்று காலை சென்னை செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.

22 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர், நேற்று இரவு தவூசிஃப் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து மாடிக்கு சென்று அங்கிருந்த மூன்று பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 22 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துவிட்டு பின் வீட்டின் சோபாவில் அமர்ந்து குளிர்பானம் மற்றும் சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.

இன்று காலை தவூசிஃப் வீட்டிற்கு வந்த பணிப்பெண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தவூசிஃபிற்கு தகவல் அளித்துள்ளார், உடனடியாக வீட்டிற்கு வந்த தவூசிஃப் வாணியம்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் கொள்ளையடிக்கப்பட்ட அடுத்த நாளே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மேலும் வாணியம்பாடிக்கு புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளரை நியமித்து இரண்டே நாட்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Intro:

வாணியம்பாடியிற்கு புதிய காவல் துறை துணை கண்காணிப்பாளர் நியமித்து இரண்டு நாட்களில் பூட்டிய வீட்டில் குளிர்பானம் அருந்தியும் சாக்லெட் சாப்பிட்டும் 22 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி கொள்ளை,

Body: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பட்டேல் யாகூப் சாகித் வீதியை சேர்ந்தவர் தவூசிஃப் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரியும் இவர் வழக்கம் போல் நேற்று பணி சென்றிருந்தர்,

இவரது மனைவி வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து கணவன் மனைவி இருவரும் இன்று காலை சென்னை செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.

இதனையறிந்த மர்மநபர் நேற்று இரவு தவூசிஃப் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து மாடியிற்கு சென்று அங்கிருந்த மூன்று பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 22 சவரன் தங்க நகை மற்றும் 1 1/2 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துப்பின் வீட்டின் சோபாவில் அமர்ந்து குளிர்பானம் மற்றும் சாக்லெடை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.

இன்று காலை தவூசிஃப் வீட்டிற்கு வந்த பணிப்பெண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தவூசிஃபிற்கு தகவல் அளித்துள்ளார்,

உடனடியாக வீட்டிற்கு வந்த தவூசிஃப் வாணியம்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: இதேப்போல் நேற்று வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் கொள்ளையடிக்கப்பட்டு அடுத்த நாளே மற்றொறு திருட்டு சம்பவம் நடந்துள்ளது ,

மேலும் வாணியம்பாடியிற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Sep 4, 2019, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.