வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதியுற்றனர்.
இந்நிலையில் மாலைப்பொழுதில் கருமேகம் சூழ்ந்து சிறு தூறலாக பெய்தமழை சற்று நேரத்தில் ஆலங்கட்டி மழையாக பெய்யத்தொடங்கியது.
இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இந்த இதமான சூழலால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஆங்காங்கே மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.