ETV Bharat / state

திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பரப்புரை - சுட்டு

வேலூர்: ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் வைகோ பரப்புரை மேற்கொண்டார்.

மதக்கலவரத்தைத் தூண்டினால் சுட்டுக் கொள்வோம்-வைகோ மிரட்டல்
author img

By

Published : Mar 26, 2019, 11:05 PM IST

வேலூர் மாவட்டம் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் வைகோ பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய வைகோ, மத்தியில் ஆட்சிபுரியும் மோடி அரசு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என தெரிவித்தும் இரண்டு ஆயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நேரமில்லாத மோடிக்கு ஊர் சுற்ற நேரமுள்ளதா எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.

மேலும், உத்தரப்பிரதேசம் அலிகாரில் இந்துமகா சபையினர் காந்தியின் உருவபொம்மையை சுட்டும், தீயிட்டு கொளுத்தியும், கோட்சே வாழ்க என முழக்கமிட்ட போது பிரதமர் மோடி கண்டித்து, கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பினார்

Intro: இந்து முஸ்லீம் பற்றி யார் பேசினாலும் அவர்களை சுட்டு கொள்வோம் என ஆம்பூர் பைபாஸ் சாலையில் வைகோ பிரச்சாரம்.

Body: வேலூர் மாவட்டம் மக்களவைத்தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ,

இதில் பேசிய வைகோ மத்தியில் ஆட்சிபுரியும் மோடி அரசு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார், ஆனால் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு அளிக்கவில்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்ககூட நேரமில்லாத மோடி ஊர் ஊராக சுற்றுவதற்கு நேரமுள்ளதா தமிழகம் என்ன பாவம் செய்தது, என கேள்வி எழுப்பினார்.

மேலும் உத்திரபிரதேசம் அலிகாரில் இந்து மகா சபையினர் காந்தியின் உருவபொம்மையை சுட்டும் தீயிட்டு கொளுத்தியும் கோட்சே வாழ்க என கூறினர் இதற்கு பிரதமர் மோடி ஒரு கண்டனமாவது தெரிவித்தாரா, அல்லது அவர்களின் மீது கைது நடவடிக்கை எடுத்தாரா,

இந்து முஸ்லீம் சகோதரர்கள் மீது யாராவது கைவைத்தால் அவர்களையும் சுட்டு கொள்வோம் என கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இந்திய நாடு சாதி மத வேறுபாடுகளால் இரத்தகளரியாக மாறக்கூடாது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளோம்.

Conclusion: மேலும் இத்தேர்தலில் அனைவரும் சாதி மத பாகுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.