ETV Bharat / state

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவர் கைது! - Local country bomb

வேலூர்: குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரை மேல்பட்டி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Two person arrested for making local country bombs

author img

By

Published : Sep 3, 2020, 10:40 PM IST

Updated : Sep 3, 2020, 10:47 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே லட்சுமி அம்மாள் புரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சந்திரா(40). இவர் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில், கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று மேய்ச்சலில் இருந்த பசுமாட்டை வீட்டிற்கு ஓட்டி செல்ல மாட்டின் கயிற்றை அவிழ்க்க முயன்ற போது, அங்கு இருந்த பிளாஸ்டிக் டப்பாவை சந்திரா கையில் எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், சந்திராவின் இடது கையில் இரண்டு விரல் துண்டிக்கப்பட்டன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த மேல்பட்டி காவல் துறையினர், இன்று (செப்டம்பர் 3) லட்சுமி அம்மாள் புரத்தைச் சேர்ந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் வெங்கடேசன், மகேந்திரன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

Last Updated : Sep 3, 2020, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.