ETV Bharat / state

வேலூர் சிறைக்குள் ராஜ்யம் நடத்தும் கஞ்சா கடத்தல் கும்பல்- அதிகாரிகள் அதிரடி சோதனை - Special police officers

வேலூர் : மத்திய சிறைக்குள் சோதனை செய்ய வந்த சிறப்பு குழு அதிகாரிகளை கைதிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மத்திய சிறை
author img

By

Published : Mar 24, 2019, 11:38 PM IST

வேலூர் மத்திய சிறையில் சமீபகாலமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கைதிகள் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்ட நடமாட்டத்தை கண்காணிக்க வேலூர் மத்திய சிறையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறைக்குள் சிறைக்கைதி குணா என்பவர் கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகிப்பதாக சிறப்புக்குழு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சிறப்புக்குழு அதிகாரிகள் சிறைக்கைதி குணா இருக்கும் அறைக்குள் நேற்று அதிரடி சோதனை நடத்த முயன்றபோது குணா, தன்னிடம் கஞ்சா எதுவும் இல்லை என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். சிறப்புக்குழு அதிகாரிகள் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ,சிறைக்கைதி குணாவின் நண்பர்களான விக்கி(25), சந்தோஷ்(26), கோபி(27), சூர்யா(28) மணிகண்டன், சதாம் உசைன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு குணா மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இருந்த பல்புகளை உடைத்து கலாட்டாவில் ஈடுபட்டனர். மேலும், தகராறு செய்ததோடு சிறைக் காவலர் ஒருவரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு குழு அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து சிறை ஜெயிலரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே வேலூர் மத்திய சிறை துணைச் ஜெயிலர் குப்புசாமி இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், குற்றவாளி குணா மற்றும் அவரது நண்பர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிறைக்குள் சோதனை செய்ய வந்த சிறப்புப் குழு அதிகாரிகளை கைதிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விசாரணைக் கைதிகளாக உள்ள நபர்களுக்கு சிறைக்குள்ளேயே அதிகாரிகளை எதிர்க்கும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்துக்கு பின்னால் பெரும் பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வேலூர் சிறைக்குள் ராஜ்யம் நடத்தும் கஞ்சா கடத்தல் கும்பல்

சோதனைக்கு சென்ற அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட 7 வாலிபர்கள் கைது

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வேலூர் மத்திய சிறையில் சமீபகாலமாக கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் வெளியாகின இதேபோல் செல்போன் உள்ளிட்ட சகல வசதிகளும் கைதிகள் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது இதைடுத்து கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க வேலூர் மத்திய சிறையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் சிறைக்குள் விசாரணை கைதி குணா என்பவர் கைதிகளுக்கு கஞ்சா அதிக அளவில் சப்ளை செய்வதாக சிறப்புக்குழு அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறப்பு குழு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சிறைக்குள் சென்று குணா தங்கியுள்ள அறையை சோதனையிட முயன்றனர் அப்போது குணா அதிகாரிகளிடம் தன்னிடம் கஞ்சா எதுவுமில்லை தேவையில்லாமல் என்னை விசாரிக்க வேண்டாம் என கோபத்துடன் தெரிவித்துள்ளார் அதற்கு அதிகாரிகள், உறுதியான தகவலின் பேரில் தான் வந்துள்ளோம் என கூறியுள்ளனர் இதற்கிடையில் குணாவின் நண்பர்கள் விக்கி(25), சந்தோஷ்(26), கோபி(27), சூர்யா(28) மணிகண்டன், சதாம் உசைன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது உடனே கைதிகளை விசாரணை செய்யும் இடத்திற்கு குணா மற்றும் அவனது நண்பர்களை அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது அங்கேயும் கைதிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர் ஒரு கட்டத்தில் சிறைக் காவலர் ஒருவரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது மேலும் அதிகாரிகள் சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதி குணா மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இருந்த பல்புகளை உடைத்து கலாட்டாவில் ஈடுப்பட்டுள்ளனர் இதையடுத்து சிறப்பு குழு அதிகாரிகள் சம்பவம் குறித்து சிறை ஜெயிலரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே வேலூர் மத்திய சிறை துணைச் ஜெயிலர் குப்புசாமி இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை குற்றவாளி குணா மற்றும் அவரது நண்பர்களை இந்த வழக்கில் கைது செய்தனர் ஏற்கனவே அவர்கள் சிறையில் இருப்பதால் நீதிமன்றம் மூலம் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பலத்த பாதுகாப்பு உடைய வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தல் கும்பல் ராஜ்ஜியம் நடத்தி வரும் சம்பவம் சிறைத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளிடம் தகராறு செய்யும் அளவிற்கு கைதிகளுக்கு தைரியம் வந்தது எப்படி?

சிறைக்குள் சோதனை செய்ய வந்த சிறப்புப் குழு அதிகாரிகளை கைதிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விசாரணைக் கைதிகளாக உள்ள நபர்களுக்கு சிறைக்குள்ளேயே அதிகாரிகளை எதிர்க்கும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர் மேலும் இந்த சம்பவத்துக்கு பின்னால் பெரும் பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது  கைதி குணாவுக்கும் சிறைக்கு வெளியே உள்ள கஞ்சா கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் எனவே விசாரணையில் சிக்கிக் கொண்டால் தனக்கு பின்னால் இருப்பவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்ற பயத்தில்தான் நேற்று சிறைக்குள் கைதிகள் அதிகாரிகளுடன் தகராறில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது மேலும் வேலூர் மத்திய சிறையில் பொருத்தவரை சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருக்கும் சிறைக் கைதிகளை பார்க்க வருபவர்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவே அப்படி இருக்கும்போது கைதிகளுக்கு கஞ்சா எப்படி வந்தது என கேள்வி வந்தது மேலும் இதில் உள்ள சில அதிகாரிகளின் துணையுடன் தான் இந்த கஞ்சா கடத்தல் நடப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.