ETV Bharat / state

வேலூரில் காணாமல் போன அம்மன் சிலை மீட்பு!

author img

By

Published : Nov 22, 2019, 6:17 PM IST

வேலூர்: காட்பாடியில் கடந்த 15ஆம் தேதி காணாமல் போன அம்மன் கோயில் சிலையை ரயில் நிலையம் அருகே காவல் துறையினர் மீட்டனர்.

காணாமல் போன அம்மன் சிலையை மீட்ட காவல் துறையினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விடிகே நகர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் கடந்த 15ஆம் தேதி பாரம்பரிய சிலை ஒன்று காணாமல் போனது. இரவு நேரத்தில் கோயிலில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலையை திருடிச் சென்றதாக கோயில் நிர்வாகிகள் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையை தொடங்கிய காவல் துறையினர், முதற்கட்டமாக கோயில் அருகே உள்ள கண்காணிப்புக் கேமராவின் மூலம் ஏதேனும் தடையங்கள் சிக்குமா என ஆய்வு செய்தனர். ஆனால், எவ்வித தடையமும் கிடைக்காமல் காவல் துறையினர் தினறி வந்தனர்.

இந்நிலையில், இன்று விடிகே நகர் அருகே ரயில் தண்டவாளத்தில் சிலை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அந்த சிலையை ஆய்வு செய்தனர். அதில், அந்த சிலை கடந்த 15ஆம் தேதி காணாமல் போன அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த நான்கு பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கனவுல பேயைக் கண்டு கிணற்றில் குதித்தவர் மீட்பு...

Intro:வேலூர் மாவட்டம்

காட்பாடியில் கடந்த 15ம் தேதி காணாமல் போன அம்மன் கோயில் சிலை மீட்பு -

4 பேரிடம் போலீசார் விசாரணைBody:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விடிகே நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கடந்த 15ம் தேதி பாரம்பரிய சிலை ஒன்று காணாமல் போனது இரவில் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சிலையை திருடிச் சென்றதாக கோவில் நிர்வாகிகள் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் அடிப்படையில் காட்பாடி காவல் துறை இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர் கோயில் அருகில் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தடயம் சிக்குகிறதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் இருப்பினும் போலீசாருக்கு இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறி வந்த நிலையில் இன்று விடிகே நகர் அருகே ரயில் தண்டவாளத்தில் சிலை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக பொதுமக்கள் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அது காணாமல் போன அம்மன் சிலை என்று தெரிய வந்ததையடுத்து சிலை பத்திரமாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பகுதியை சேர்ந்தவ 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.