ETV Bharat / state

கனவுல பேயைக் கண்டு கிணற்றில் குதித்தவர் மீட்பு...

author img

By

Published : Nov 22, 2019, 5:23 PM IST

கன்னியாகுமரி: தூங்கிக் கொண்டிருந்த போது பேய் விரட்டியதாக கனவு கண்டு பயத்தில் கிணற்றில் குதித்த நபரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

youth jumped in well for Ghost fear near kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஸ்டீபன் (34). இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பேய் விரட்டுவதாக கனவு கண்டுள்ளார். இதனால் பயந்து வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த இவர் அருகே உள்ள நாகதேவி கோயில் கிணற்றில் குதித்துள்ளார்.

அக்கோயிலுக்கு வந்த அர்ச்சகர் கிணற்றிலிருந்து சத்தம் கேட்டதால் உள்ளே பார்த்துள்ளார். அங்கே, ஸ்டீபன் தண்ணீரில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து ஸ்டீபனை மீட்டனர்.

கனவில் பேய் விரட்டியதால் கிணற்றில் குதித்த நபர்

இதுகுறித்து புதுக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கனவில் மூன்று பேய்கள் விரட்டி வந்ததாக தெரிவித்த ஸ்டீபனின் வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் கிணற்றில் புதையல் இருப்பதாக நம்பி இறங்கி விட்டு கரையேற முடியாமல் தவித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற ரீதியில் விசாரிக்கின்றனர்.

இதையும் படியுங்க:

பேய் கண்களைக் கொண்ட குழந்தை - அதிர்ச்சியடைந்த தாய்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது பேய் விரட்டியதாக கனவு கண்டு பயத்தில் கிணற்றில் குதித்த வாலிபரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
Body:கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான
ஸ்டீபன் 34. இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பேய் விரட்டுவதாக கனவு கண்டதாக கூறப்படுகிறது.
இதில் பயந்து வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த அவர் அருகே உள்ள நாகதேவி கோயில் கிணற்றில் குதித்து உள்ளார். காலையில் கோயிலுக்குச் வந்த அர்ச்சகர் கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்பதை பார்த்து உள்ளே பார்த்துள்ளார்.
அங்கே, ஸ்டீபன் தண்ணீரில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குழித்துறை தீயணைப்பு துறையினர் சம்ப இடத்திற்கு வந்து வலை கட்டி கிணற்றில் இருந்து சிறு காயத்துடன் ஸ்டீபனை மீட்டனர்.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், " அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூன்று பேய்கள் என்னை விரட்டியதால் பேய்களிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்ததாக போலீசாரிடம் ஸ்டீபன் தெரிவித்துள்ளார் ".
எனினும் அவர் கூறியதில் சந்தேகம் அடைந்த போலீசார், கிணற்றில் புதையல் இருப்பதாக நம்பி ஸ்டீபன் கிணற்றில் இறங்கி விட்டு பின்னர் கரையேற முடியாமல் தவித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.