வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஈச்சங்கால் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இந்த பூஜையில் பொது மக்கள் பலரும் கலந்துக்கொண்டு காணிக்கை செலுத்தினர் .
இந்நிலையில், இன்று அவ்வழியாக சென்ற சிலர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அம்மன் கழுத்திலிருந்த நான்கு கிராம் தங்கச் சங்கிலி, உண்டியலில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இது குறித்து ஊர் பொதுமக்கள் அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.