ETV Bharat / state

தண்ணீர் பிரச்னை...ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு - water scarcity

வேலூர்: சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்வது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அலுவலர்கள் இன்று இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தினர்.

ரயில் நிலையத்தில் அலுவலர்கள் இரண்டாம் கட்ட ஆய்வு
author img

By

Published : Jun 26, 2019, 2:39 PM IST

சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இதை சமாளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை ரயிலில் சென்னைக்கு எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அலுவலர்கள் இரண்டாம் கட்ட ஆய்வு

இது தொடர்பாக, ஆய்வு நடத்தி விரைவில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றும் அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
.

Intro:சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்வது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் 2ம் கட்ட ஆய்வு
Body:தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை ரயிலில் சென்னைக்கு எடுத்து செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது இது தொடர்பான ஆய்வு நடத்தி விரைவில் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அதை தொடர்ந்து இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

இந்த ஆய்வில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேலூர் மாவட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் அப்போது ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் தினமும் எவ்வளவு தண்ணீர் எடுத்து செல்லலாம் ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

மேலும் மேட்டுசக்கறகுப்பம் பகுதியில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய தண்ணீர் சேமிக்க கூடிய நீர்தேக்க தெட்டியில் இருந்து ரயில் நிலயத்திற்கு நேரடியாக தண்ணீர் குழாய் புதைப்பதுர்க்கன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இந்த குடிநீர் குழாய் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் கீழ் கொண்டு செல்ல முடியாத நிலையில் தற்போது மாற்று பாதையை இங்கு ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் இந்த ஆய்வின் முடிவில் எந்த பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல படும் என்று தெரியவரும்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.