ETV Bharat / state

வேலூரில் குடிபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது..!

Vellore horror: வேலூரில் குடிபோதை தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

வேலூரில் குடிபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 11:33 AM IST

வேலூர்: கொசப்பேட்டை மாசிலா மணி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (63). இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

சமையல் மாஸ்டரான சரத்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து, அவரது தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 25) வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சரத்குமார், அவரது தாய் மற்றும் தந்தையிடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சரத்குமாரின் தந்தை தேவராஜூக்கும், சரத்குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாற, தேவராஜ் தன் மகன் சரத்குமாரை கையில் கிடைத்த பொருட்களால் தாக்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சரத்குமார் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை தேவராஜ் காலையும், கழுத்தையும் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தேவராஜ், ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளார்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!!

தேவராஜின் இந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சடைந்த தேவராஜியின் மனைவி அமராவதி மற்றும் மகள் சரண்யா அலறியடித்துக் கொண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் வேலூர் பென்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று தேவராஜ் உடலைப் பெற்று உடற்கூறு ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர். மேலும், குடிபோதையில் தந்தையை மகனே கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூரு போலீஸ் பெயரில் போலி ட்விட்டர் - சென்னை மருத்துவ மாணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.