ETV Bharat / state

செயற்கை மணலுக்காக விவசாய நிலத்தை அழிக்கும் மணல் மாஃபியாக்கள் - Impact of agricultural land on artificial sand

திருப்பத்தூர்: செயற்கை மணலுக்காக விவசாய நிலத்தை அழிக்கும் மணல் மாஃபியாக்களை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

sand theft
sand theft
author img

By

Published : Jan 4, 2020, 5:29 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு சிறப்புகளும், பல்வேறு பெருமைகளும் பெயர் பெற்ற ஊராகும்.‌ திருப்பத்தூர் நகரத்தை சுற்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.‌ இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். திருப்பத்தூரில் பிரதான ஆறுகளான துலாம் நதி, பாம்பாறு, பாலாற்றின் கிளை ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் இதனை பயன்படுத்திக்கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாஃபியாக்கள் ஆறுகளில் மணல்களை திருடி விற்று வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

திருப்பத்தூரில் நடக்கும் மணல் திருட்டு

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி, நத்தம் ஆகிய ஊராட்சிகளின் வழியாக துலாம் நதியில் கடந்த பத்தாண்டுகளாக மணல் திருட்டு தொடர்வதால் அப்பகுதிகளில் ஆறுகள் இருந்த சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. நத்தம், சுந்தரம்பள்ளி, காக்கங்கரை, போன்ற பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களிலும் சுமார் 50 அடி அளவிற்கு ராட்சத இயந்திரங்கள் கொண்டு மணல் கொள்ளை வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது திருப்பத்தூர் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயற்கை மணல் தயாரிக்கும் அவல நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் காக்கங்கரை, நத்தம், கிருஷ்ணாவரம், சுந்தரம்பள்ளி போன்ற பகுதிகளிலுள்ள செயற்கை மணல் தயாரிக்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிகள் மற்றும் செயற்கை மணலை வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடித்து தரைமட்டமாக்கினர். அங்கு சேமிக்கப்பட்டிருந்த செயற்கை மணல்களை பறிமுதல் செய்தனர்.

அரசு அலவலர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அலுவலர்கள் மணல் கடத்தலுக்கு துணைபோவது வேதனையான சம்பவம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இயற்கை வளத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

Intro:செயற்கை மணலுக்காக விவசாய நிலத்தை அழிக்கும் மணல் மாபியாக்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்.Body:

திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு சிறப்புகளும், பல்வேறு பெருமைகளும் பெயர் பெற்ற ஊராகும்.‌ திருப்பத்தூர் நகரத்தை சுற்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.‌ இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். திருப்பத்தூர் பகுதியில் பிரதான ஆறுகளாக துலா நதி மற்றும் பாம்பாறு, பாலாற்றின் கிளை ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் (தண்ணீர்) இன்று வறண்டு காணப்படுவதால் இதனை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள் ஆறுகளில் மணல்களை திருடி விற்று யோக போக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி, நத்தம் போன்ற ஊராட்சிகளில் வழியாக துலாம் நதி என்ற ஆறு செல்லுகிறது. இந்த ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளாக தொடரும் மணல் திருட்டால் அப்பகுதிகளில் ஆறே இல்லாத சுவடுகளாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் நத்தம், சுந்தரம்பள்ளி, காக்கங்கரை, போன்ற பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகள் அமைத்து அதற்கு தேவையான மண்களை செழுமையாக விவசாயம் செய்யக்கூடிய விவசாய நிலத்தில் சுமார் 50 அடி அளவிற்கு ராட்சத இயந்திரங்கள் கொண்டு மணல் கொள்ளை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தடுக்க சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது திருப்பத்தூர் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயற்கை மணல் தயாரிக்கும் அவல நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் இடமும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த வாரங்களில் காக்கங்கரை, நத்தம், கிருஷ்ணாவரம், சுந்தரம்பள்ளி போன்ற பகுதிகளிலுள்ள செயற்கை மணல் தயாரிக்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிகள் மற்றும் செயற்கை மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இடித்து தரைமட்டமாக்கி அங்கு சேமிக்கப் பட்டு இருந்த செயற்கை மணல்களை பறிமுதல் செய்தனர். நிலைமை இப்படியிருக்க மீண்டும் அப்பகுதிகளில் செயற்கை மணல் தயாரிக்க அப்பகுதியில் உள்ள மணல் மாபியாக்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் இச்செயலுக்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மணல் கடத்தலுக்கு துணைபோவது வேதனையான சம்பவம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இயற்கை வளத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.