ETV Bharat / state

மழையை சேமிக்கக் கோரி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்! - வேலூரில் சைலேந்திரபாபு பேட்டி

வேலூர்: மழை நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

மழையை சேமிக்கக் கோரி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்!
author img

By

Published : Oct 21, 2019, 11:25 AM IST

ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், அரசுப் பணியைத் தவிர்த்து பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் சென்றார்.

அதன்படி சென்னை பூந்தமல்லியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்த அவரை பொது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை லயன்ஸ் கிளப் சார்பில், மழைநீர் சேமிப்பு குறித்து சைக்கிள் பயணம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

மழையை சேமிக்கக் கோரி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்

மேலும் பேசிய அவர், அடுத்த கட்டமாக இந்தியாவின் மேற்குப் பகுதியான குஜராத் மாநிலத்திற்கும், அதைத் தொடர்ந்து அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சைக்கிள் பயணம் மேற்கொள்வோம் என்றும், செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் மரங்களை நட்டு மழைநீரை சேமிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்.

இதையும் படியுங்க:

தமிழில் கவிதையை வெளியிட்ட மோடி!

Intro:வேலூர் மாவட்டம்

மழை நீரை சேமிக்க கோரி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு 3,600 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் - வேலூரில் பொதுமக்கள் உற்சாக வரவேற்புBody:ரயில்வே டிஜிபியாக உள்ள ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு அரசு பணியை தவிர்த்து பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவது மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இந்த நிலையில் மரங்கள் நட்டு மழைநீரை சேமிக்க கோரி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணத்தை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு இன்று தொடங்கினார். அதன்படி சென்னை பூந்தமல்லியில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய டிஜிபி சைலேந்திரபாபு சென்னையிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்தார் அப்போது அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர் இளைஞர்கள் பலர் ரோஜாப்பூ கொடுத்து அவரை வரவேற்றனர் அதன்பிறகு சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, சென்னை லயன்ஸ் கிளப் சார்பில் மரங்கள் நட்டு அதன் மூலம் மழைநீரை சேமிக்கும் படி சைக்கிள் பயணம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை பூந்தமல்லியில் இன்று நான் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளேன். அடுத்த கட்டமாக இந்தியாவின் மேற்குப் பகுதியான குஜராத் மாநிலத்திற்கு செல்ல உள்ளோம் தொடர்ந்து அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சைக்கிள் பயணமாக 22 நாட்களில் 3200 கிலோ மீட்டர் தூரம் செல்கிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களிடம் மரங்களை நட்டு மழைநீரை சேமிக்கும் படி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.