ETV Bharat / state

பொற்கொடியம்மன் விழா - ஏரியில் சமைத்து மக்களுடன் உண்டு தேரை தூக்கி வழிபாடு! - பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழா

வேலூர் அருகே பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Temple function
கோயில் திருவிழா
author img

By

Published : May 10, 2023, 6:30 PM IST

கோயில் திருவிழா

வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் உள்ள பொற்கொடியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புஷ்ப ரத ஏரித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இன்று (மே 10) நடைபெற்றது. வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம், வேலங்காடு, பனங்காடு உள்ளிட்ட கிராம மக்கள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் தென்னை ஓலைகளை கட்டிக் கொண்டு கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் ஆடு, கோழிகளை ஏரியில் பலியிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும் அதை அங்கு வந்த பொதுமக்களுக்கும் பரிமாறினர். குடும்பம் மற்றும் விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் வேண்டி பொம்மைகளை நேர்த்திக்கடனாக அம்மனுக்கு செலுத்தி வழிபாடு நடத்தினர். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, தருமபுரி, சித்தூர், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு ஆகியப் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க, ரதத்தை தூக்கி வந்து ஏரியில் வைத்து வழிபாடு நடைபெற்றது. ஏரியில் பாதியளவு நீர் இருந்த நிலையிலும் பொதுமக்கள் ஏரித் திருவிழாவைக் கொண்டாடினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "ஆண்டுதோறும் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும்" என கேட்டுக் கொண்டனர்.

பொற்கொடியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், வேலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் அசத்தல் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா - திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அவலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.