ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் காற்று, நீருக்கு அதிக மாசுபடுதலை ஏற்படுத்தும்விதமாக செயல்பட்டுவந்த 29 தொழிற்சாலைகளில் ஆய்வுமேற்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மொத்தமாக அத்தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம், ரசாயன தோல் தொழிற்சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என 29 தொழிற்சாலைகளில் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது சுத்திகரிப்புச் செய்யாமல் கழிவுநீர் வெளியேற்றப்பட்டதைக் கண்டறிந்த அலுவலர்கள் காற்று, நீர் ஆகிய சுற்றுச்சூழல் காரணிகளுக்கு அதிகளவில் மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் தொழிற்சாலைகள் செயல்பட்டுவந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் அதன் தகுதிக்கு ஏற்றவாறு மொத்தமாக 6.88 கோடி ரூபாய் அபராதத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிடக் கூடாது - ராமதாஸ் எதிர்ப்பு!