திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (63) என்பவர், சுந்தரம்பள்ளியில் எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வீட்டை பூட்டி கடைக்குச் சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், மூர்த்தியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் செல்ல முயன்றனர்.
இதைக்கண்ட பொதுமக்கள், கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த கந்திலி காவல் துறையினர், கொள்ளையர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் மாலூரைச் சேர்ந்த கணேஷ், பெங்களூரைச் சேர்ந்த ராஜீவ் என்பது தெரியவந்தது.