வேலூர்: ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தை சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் - நந்தினி தம்பதியின் இளைய மகன் துர்கபிரசாந்த் (13). இவர் செப்.,25 மாலை பாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பும் போது சிறுவனின் மிதிவண்டி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் துர்காபிரசாத்தை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து அவரது பெற்றோரின் அனுமதியோடு சிறுவனின் கல்லீரல், ஒரு சிறுநீரகம் சென்னை எம்.ஜிஎம் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவரால் எனது மகனின் உயிர் பறிபோயுள்ளது. தமிழக அரசு இதுபோல் நடக்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைவரும் உடலுறுப்பு தானம் செய்ய வேண்டும் என சிறுவனின் தந்தை கூறினார்.
இதையும் படிங்க: விடுப்பு வழங்காததால் தடைபட்ட காவல் அதிகாரி மகளின் நிச்சயதார்த்தம்...வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு