ETV Bharat / state

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி மீட்பு!

வேலூர்: ரயிலில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 டன் அளவிலான ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புத் துறையினர் மற்றும் பறக்கும் படையினர் மீட்டனர்.

author img

By

Published : Apr 27, 2021, 7:40 PM IST

ரயிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி

சென்னையில் இருந்து மைசூரு செல்லக்கூடிய காவேரி விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய பிரிந்தாவன் விரைவு ரயிலில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே பாதுகாப்புத் துறை(RPF) மற்றும் மாவட்ட பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நேற்று (ஏப்ரல். 26) இரவு, காட்பாடி சந்திப்பை வந்தடைந்த காவேரி விரைவு ரயில் மற்றும் இன்று (ஏப்ரல். 27) காலை வந்தடைந்த பிரிந்தாவன் ரயில் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சபர்பதி, வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

ரயிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி

அப்போது ரயிலின் கழிவறை, இருக்கையின் அடியில் இருந்து சுமார் 1 டன் அளவிலான ரேஷன் அரிசி மீட்கப்பட்டது. இவற்றை யார் கடத்தி வந்தனர் என்பது குறித்து காவல் துறையினர் ரயிலில் தேடியும், யார் என்பது தெரியவில்லை.

பின்னர் மீட்கப்பட்ட அரிசி திருவலம் அரசு காணியக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.