ETV Bharat / state

மழைக்காக முனீஸ்வரன் சிலை அமைத்த கிராம மக்கள்!

வேலூர்: மழை வேண்டி ஏரிக்கரையில் 21 அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலை அமைத்து கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஏரிக்கரையில் முனீஸ்வரன் சிலை அமைத்த ஊர் மக்கள்
author img

By

Published : May 26, 2019, 10:27 PM IST

தமிழ்நாட்டில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் பல இடங்களில் ஏரி ஆறு குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே மழை வேண்டி பல கோவில்களில் வழிபாடு யாகம் செய்கின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை ஓரம் 21 அடி உயர முனீஸ்வரர் சிலை அமைத்து பொதுமக்கள் மழை வேண்டி கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜைகள் நடத்தி வழிபட்டனர். அதன்படி 24 நாட்களாக யாகசாலை அமைத்து கங்கை யமுனை உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து கலசங்களில் ஊற்றி மந்திரங்களால் உரு ஏற்றப்பட்டு அந்த புனித நீர் முனீஸ்வரர் சிலை மீது ஊற்றப்பட்டது.

மழை வேண்டி ஏரிக்கரையில் முனீஸ்வரன் சிலை அமைத்த ஊர் மக்கள்

மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி சுற்றுவட்டார கிராம மக்கள் செய்து வழிபட்டனர். இறுதியில் கிடாவெட்டி அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

Intro:வேலூரில் மழை வேண்டி ஏரிக்கரையில் 21 அடி உயன முனீஸ்வரன் சிலை அமைத்து ஊர் மக்கள் கும்பாபிஷேகம்

Body:தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பருவமழை பொய்த்த நிலையில் கோடை மழையும் பெய்யாததால் பல இடங்களில் ஏரி ஆறு குளங்கள் வறண்டு கிடக்கின்றன இதனால் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. எனவே மழை வேண்டி பல இடங்களில் பொதுமக்கள் கோவில்களில் இறைவனுக்கு வழிபாடு செய்கின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை ஓரம் 21 அடி உயர முனீஸ்வரர் சிலை அமைத்து பொதுமக்கள் மழை வேண்டி கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜைகள் நடத்தி வழிபட்டனர் அதாவது முனிஸ்வரன் சிலை அமைத்து வழிபட்டால் மழை வரும் என்று வேத நூல்கள் கூறுவதால் வேலூர் மாவட்டத்தில் ஏரிக்கரையில் 21 அடி உயர முனீஸ்வரர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர் திட்டமிட்டபடி பிரமிக்கும் வகையில் 21 அடி உயரத்தில் முனீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டது இதையடுத்து சிலைக்கு கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நடத்தும் பணிகள் தொடங்கின அதன்படி 24 நாட்கள் யாகசாலை அமைத்து கங்கை யமுனை உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து கலசங்களில் ஊற்றி மந்திரங்களால் உரு ஏற்றப்பட்டு அந்த புனித நீரில் முனீஸ்வரர் சிலை மீது ஊற்றப்பட்டது. இறுதி நாளான இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இறைவனை பயபக்தியுடன் வழிபட்டனர் நிகழ்ச்சி முடிவில் கிடா வெட்டி அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.