ETV Bharat / state

விநோத நோயால் துடிக்கும் வேலூர் சிறுவன்.. அரசிடம் மன்றாடும் ஏழைத்தாய்! - சிகிச்சைக்கு உதவக் கோரிக்கை

'பசிக்குது அம்மா!.. வலிக்குது அம்மா!..' என்ற மழலைகளின் வார்த்தைகளைக் கேட்டு மருத்துவ சிகிச்சைக்காக பல தரப்பிலும் உதவி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் ஏழைத்தாய் ஒருவர், விநோத நோயால் அவதியுறும் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 28, 2022, 7:41 PM IST

வேலூர் மாவட்டம், அரியூர் ஜெகஜீவன்ராம் தெருவில் வசிக்கும் வளர்மதியின் வீட்டுக்குள் அன்பும் அரவணைப்பும் நிறைந்துள்ளன. ஆனால், அதனை பிணியும் வறுமையும் ஒருசேர இணைந்து அவ்வீட்டின் சந்தோஷத்தை மொத்தமாக தனது கோரப் பிடிக்குள் வைத்துள்ளன. பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்ட தனது 19 வயதே ஆன மகனை வைத்துக்கொண்டுப் போராடி வரும் இந்தத் தாயின் நிலைமையையும் துயரத்தையும் அறிந்தால் கல்லும் கண்ணீர் சிந்தும்.

உடல் மற்றும் மனநிலை குறைபாட்டால் போராடும் மகன் சரண்சங்கீத், பள்ளிக்கு செல்லும் 11 வயது மகள் ரதிகேஷரி ஆகியோரோடு தனது வாழ்க்கையை ஒரு போராட்டம் போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் வளர்மதியின் துயரத்தைக் கேள்வியுற்ற நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் இன்று (நவ.28) அவரது வீட்டுக்குச் சென்றது.

வலிக்குது அம்மா..!: வீட்டிற்குள் விநோத நோயால் துடிக்கும் மகன்.. பரிதவிக்கும் தாய்.. உதவி கேட்கும் குடும்பம்.. இவ்வாறு பல விரிசல்களை கொண்ட அந்தப் பழைய வீட்டின் சுவர்களில் செடிகள் முளைத்துக் கொண்டு இருந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இரண்டு கண்களும் வெடிக்கும் நிலையிலான பாதிப்பில் சுருண்டு கிடக்கிறான் சிறுவன் சரண்சங்கீத். தன் வலியை, நோயின் தீவிரத்தைக் கூட வாய்விட்டு சொல்லத் தெரியாத அந்தச் சிறுவன், தன் தாய் மடியிலேயே சாய்ந்துகிடக்கிறான்.

'அம்மா' என்பதைத் தவிர வேறெதும் தெரியாது: இது குறித்து விழியில் வழிந்தோடிய கண்ணீருடன், "எம் பிள்ளைகளை நினைச்சு அழுது.. அழுது.. என் கண்ணீரும் வத்திப்போச்சுங்க" என்றபடியே பேசத் தொடங்கினார், வளர்மதி. "என் பையன் இப்போ வரைக்கும் ஒரு கைக்குழந்தை மாதிரிதான். பிறப்பிலிருந்தே அவனுக்கு மனவளர்ச்சி பாதிப்பு இருக்கு. 'அம்மா' என்ற வார்த்தையைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது.

இன்னும் குழந்தைதான்!: ஆயிரம் பேர் தொட்டாலும், என் கைபட்டவுடனே மட்டும் 'அம்மா'-னு சொல்லுவான். என் குரல் கேட்க கொஞ்சம் நேரமானாலும் துடிதுடிச்சுப் போயிருவான். அவனோட உடலுக்குத்தான் 19 வயதாகுது. அவன் மூளைக்கும் மனசுக்கும் வயசே கிடையாது; வளர்ச்சியும் கிடையாது. சாப்பாடு ஊட்டுறது, துணிகள் மாட்டி விடுறதுனு ஒரு குழந்தையைப் போலத்தான் அவனை இப்போவும் கவனிச்சுக்கிட்டிருக்கேன்.

விநோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்யக் கோரிக்கை

காலமான கணவரும் தொற்றிய துயரமும்: என்னோட வீட்டுக்காரர் ஸ்ரீதர் பாபு, செக்யூரிட்டி வேலைக்கு போயிட்டிருந்தார். 5 வருசத்துக்கு முன்னாடி அவருக்கு திடீர்னு கிட்னி பாதிப்பு ஏற்பட்டுச்சு. டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருந்தோம். திடீர்னு ஒருநாள், அவரும் என்னை தவிக்க விட்டுட்டுப் போயிட்டார்!

அப்போதான், என் பையனோட பார்வையும் திடீர்னு இப்படி பறிபோச்சு. அவனோட ரெண்டு கருவிழிகளிலும் பெரிய கட்டி வளர்ந்துக்கிட்டிருக்கு. அது என்ன நோய்னே தெரியலை! ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகவும் கையில காசு இல்லை..

நாங்க இருக்கிற இந்த வீட்டுக்கு மாதம் 500 ரூபாய் வாடகை. அதையே என்னால கொடுக்க முடியலை. ஒவ்வொரு மாதமும் எனக்கு விதவை பென்ஷன் (கைம்பெண் ஓய்வூதியம்) 1,000 ரூபாயும், பையனுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன் 1,000 ரூபாயும் தான் கிடைக்குது. இந்த 2,000 ரூபாயைத் தவிர எனக்கு வேறு வருமானம் கிடையாது.

வறுமையின் பிடியால் சிகிச்சைக்கு வழியில்லாத நிலை: மாமனார், மாமியாரும் காலமாகிட்டாங்க. என் அப்பாவும் இறந்துட்டார். ஆதரவுக்கு வேற யாரும் கிடையாது. எங்கே போய், யார்கிட்ட உதவி கேட்குறதுன்னு தெரியலை? அதுவுமில்லாம இப்போல்லாம் என் பையனுக்கு அடிக்கடி வலிப்பும் வருது. அதுக்கும் மருந்து கொடுத்துக்கிட்டிருந்தேன்.

இப்போ, வலிப்பு மருந்து வாங்கவும் காசு இல்லாம விட்டுட்டேன்! கிடைக்கிற பென்ஷன் பணம், சாப்பாட்டுக்குக்கூட பத்த மாட்டேங்குது. என் பொண்ணு பக்கத்துல இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்ல ஆறாம் வகுப்பு படிக்கிறா. காலையில வீட்ல சாப்பாடு இருந்தா சாப்பிடுவா. அவ ஸ்கூலுக்குப் போறதே முதல்ல சாப்பாட்டுக்காகத்தான்!..

என்னோட குடும்ப நிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயா கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து உதவி பண்ணுங்கய்யா...’’ என்று நலிந்த குரலுடன் கண்கலங்கினார், வளர்மதி.

அரசு உதவி செய்ய கோரிக்கை: அவர் சொல்லச் சொல்ல நம் கண்களும் கலங்கின. 'விரைவில் உதவி கிடைக்கும்' என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு நாம் அங்கிருந்து புறப்பட்டோம். இந்தத் தாய்க்கு அரசு உதவ வேண்டும்!

சொந்தமாக வீடு ஒன்றில்லை, தனக்கென்று பெரிதாக ஒரு வருமானமும் இல்லை. இதனிடையே அரசு மருத்துவர்களாலும் கண்டறிய முடியாத இந்த விநோத நோயால் அவதியுறும் மகனைக் கண்டு செய்வதறியாமல் தவித்து வருகிறார். மருத்து செலவுக்கு பணமில்லாத நிலையில், தனது மகனின் துயரைப் போக்க யாரும் உதவி செய்யாத நிலையிலும் விநோத நோயால் அவதியுறும் மகனையும், மகளையும் பேணிக்காத்து வருகிறார், தன்னம்பிக்கை பெண்மணி வளர்மதி.

முதலமைச்சர் கவனம் தேவை: ஓடியாடி விளையாட வேண்டிய வயதில், விநோத நோயால் சிறுவன் சரண்சங்கீத் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவர்களுக்கும் கைவிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. கணவனை இழந்து கைம்பெண்ணாக, தனது இரு குழந்தைகளையும் கடும் சிரமத்தின் நடுவே வளர்த்து வருகிறார், இவர். போதிய பொருளாதார வசதிகள் இல்லாமல் தனி ஒரு ஆளாகவே வாழ்வில் போராடிக்கொண்டிருக்கிறார், வளர்மதி.

பள்ளிக்கூடத்தில் அளிக்கும் சாப்பாட்டேயே ஒருநாளின் இன்றியமையாத உணவாகக் கொண்டு தனது கல்வியில் காலடி எடுத்து வைத்துள்ள பல சிறுமிகளுள் இவரின் மகளும் ஒருவராக உள்ளார். இருப்பினும் இந்த அவலநிலையின் நடுவே தான், இவரின் மகளும் பள்ளிக்கு சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.

மருத்துவத்துறையில் பல சாதனைகளை செய்துவரும், தமிழ்நாடு மருத்துவத்துறையினர் இந்த சிறுவனின் நோயைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என சிறுவன் சரண்சங்கீத்தின் தாயார் வளர்மதி கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கணவனை இழந்து யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில், விநோத நோயால் அவதியுறும் தனது மகனின் பாதிப்பிற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: புதிதாக திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை: மகிழ்ச்சியும் கோரிக்கையும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.