ETV Bharat / state

மகன் இறந்த சோகத்தில் தாயார் தற்கொலை! - மகன் விபத்தில் மரணம் தாய் தற்கொலை

வேலூரில் தனக்கு உலகமாக இருந்த ஒரே மகன் விபத்தில் இறந்த சோகத்தில் தாயார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன்
மகன்
author img

By

Published : Feb 28, 2023, 7:59 PM IST

வேலூர்: வேலூர் மாநகருக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது ஒரே மகனான ஆனந்தை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். ஆனந்தும் தாயார் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்.

கார் ஓட்டுநராக வேலை செய்து வந்த ஆனந்த் ஒரு தீவிர அஜித் ரசிகர். நீண்ட தூரம் பைக் ரைடு மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், கடந்த 24ஆம் தேதி திருச்சிக்கு நண்பர்களுடன் ரைடு சென்றபோது, விபத்து ஏற்பட்டு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே மகனைப் பிரிந்த காஞ்சனா மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று(பிப்.28) காலை காட்பாடி ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடையில் அமர்ந்திருந்த காஞ்சனா, திடீரென ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட காட்பாடி ரயில்வே போலீசார், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த சோகத்தில் தாயார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கேரள மாணவி பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.