வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நேரு (55). இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேரு கடன் கொடுத்த இடத்தில் வரவேண்டிய 11 லட்சம் ரூபாய் திருப்பி வரவில்லை. அதுமட்டுமின்றி சீட்டு கட்டிய இடத்தில் ஒருவருக்கு 4 லட்சம் ரூபாய்க்கான ஜாமின் போட்டதிலும் பணம் எடுத்த நபர் பணத்தை திருப்பிச் செலுத்தாததால், சீட்டு நடத்தியவர்கள் நேருவை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த நேரு, கே.வி. குப்பம் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேருவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேருவை மீட்டு அழைத்துச் சென்று காவலர்கள் விசாரணை நடத்தினர். நேருவிடம் கடன் பெற்றவர்கள், சீட்டு பணம் செலுத்தாதவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவர் கைது!