வேலூர்: கரோனா தொற்று காரணமாக முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
அதன்படி நேற்று (ஜூன் 11) வேலூர் மாவட்டதில், முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், குடியாத்தம் நகர பகுதியில் உள்ள மருந்து கடைகளில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு முகக்கவசங்களை விற்பனை செய்தது தெரிந்தது.
இதனை அடுத்து முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 3 மருந்து கடைகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் ஒவ்வொரு மருந்து கடைகளும் முகக்கவசங்களின் விலைப்பட்டியலை கட்டாயம் ஒட்ட வேண்டும் என குடியாத்தம் நகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்